Damakka.in

Website for Tamil Cinema

தீர்க்கதரிசி ; விமர்சனம்

எதிர்காலத்தில் நடக்கப்போவதை இப்போதே கணித்து சொல்பவர்களை தான் தீர்க்கதரிசி என்பார்கள். அதை மையப்படுத்தி விறுவிறுப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர் படம் தான் தீர்க்கதரிசி.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுபவர் ஸ்ரீமன். அவருக்கு அடுத்து நடக்கப்போகும் கொலை குறித்து ஒரு மர்ம நபர் போன் செய்து தகவல் சொல்கிறார். ஆரம்பத்தில் அதை அலட்சியமாக கருதுவதால் சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

இதனை தொடர்ந்து அலர்ட் ஆகும் காவல்துறை அதிகாரிகள் அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் யார் இந்த தீர்க்கதரிசி என கண்டுபிடிக்கும் பணியில் இறங்குகின்றனர்.

அடுத்தடுத்து தீர்க்கதரிசி சொல்லும் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில அசம்பாவிதங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மக்கள் மத்தியில் தீர்க்கதரிசி என்கிற நபர் செல்வாக்கு பெறுகிறார்.

இந்த நிலையில் யார் இந்த தீர்க்கதரிசி, எதற்காக இவர் இப்படி முன்கூட்டியே நடைபெறவுள்ள குற்றங்களை பற்றி சொல்ல வேண்டும், இது உண்மைதானா என்று ஆராய்கின்ற போலீஸ் அதிகாரி அஜ்மலுக்கு இறுதியில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. அது அவரது வாழ்க்கையே அடியோடு புரட்டிப் போடுகிறது. யார் இந்த தீர்க்கதரிசி ? படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

காவல் அதிகாரியாக வரும் அஜ்மல், கதாபாத்திரத்துக்குரிய ஆளுமையை நடிப்பில் கொண்டு வந்துவிடுகிறார். சக காவல் அதிகாரிகளாக வரும் ஜெய்வந்த், துஷ்யந்த் இருவரும் கவனிக்கவைக்கிறார்கள்.

துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீமன், மதுமிதா, மூணாறு ரமேஷ் உரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மாறுபட்ட கவுரவ கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய பகடியுடன் அலட்டாத நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து, கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான கோணத்தில் ஒரு பரபரப்பான படத்தை தந்துள்ளார் டைரக்டர். லக்ஷ்மன் ஒளிப்பதிவும் ரஞ்சீத் எடிட்டிங்கும் பரபரப்புக்கு துணை செய்கின்றன.

மொத்தத்தில் ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *