ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவாவின் ’பகீரா’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோவும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படத்தில் பிரபுதேவாவின் பலவிதமான தோற்றங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன் கூறும்போது, “பிரபுதேவா சார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக சிறந்த திரைக்கலைஞராக இருந்து வருகிறார். பான்-இந்தியா என்ற ட்ரெண்ட் வருவதற்கு முன்பே அவர் ஒரு பான்-இந்தியன் சூப்பர் ஸ்டாராக இருந்தார் என்று சொல்வேன். ஒரு ரசிகனாக, அவரது நடன அசைவுகளைப் பார்த்து நான் எப்போதும் பிரமிப்புடன் இருந்தேன். மேலும் அவர் ஒரு நடனக்கலைஞராக மட்டும் தன் எல்லையை சுருக்கிக் கொள்ளாமல், ஒரு வெற்றிகரமான நடிகராகவும் இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ’பகீரா’ படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரபுதேவா சாரை அணுகியபோது, அவர் பல படங்களில் பிஸியாக இருந்ததால், இதில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.
இந்தப் படத்திற்கு நிறைய மேக் ஓவர்கள் மற்றும் கெட்-அப்கள் தேவைப்பட்டது. இந்த ஒரு காரணமும் பிரபுதேவா சார் இந்தப் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அவர் இந்த ஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்திவிட்டு உற்சாகமாக இதில் நடிக்க சம்மதித்தார். படம் முழுக்கவே உற்சாகமாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஒருமுறை கூட அவர் சோர்ந்து போகவில்லை. இது வெறும் கெட்அப் குறித்தானது மட்டுமல்ல, தனித்துவமான உடல் மொழி, பாவனைகள் மற்றும் டயலாக் டெலிவரி போன்றவையும் இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் முதலீடு செய்த நேரமும் சக்தியும் மிகவும் அபரிமிதமானது. அவரது ஆதரவை எப்போதும் பரதன் பிக்சர்ஸ் நினைவில் வைத்திருக்கும். ’பகீரா’ பார்வையாளர்களுக்கு அன்லிமிட்டெட் எண்டர்டெயின்மெண்ட்டைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனின் திரைக்கதை அனைவரையும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஈர்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள்:
பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர், பிரகதி மற்றும் பலர்.
படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து மற்றும் இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்,
தயாரிப்பு: ஆர்.வி. பரதன்,
தயாரிப்பு நிறுவனம்: பரதன் பிக்சர்ஸ்,
இணைத்தயாரிப்பு: எஸ்.வி.ஆர் ரவிசங்கர்,
இசை: கணேசன்.எஸ்,
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்கே & அபிநந்தன் ராமானுஜம்,
படத்தொகுப்பு: ரூபன்,
கலை: சிவா யாதவ்,
விளம்பர வடிவமைப்பு: டி ஸ்டேஜ்,
பாடல் வரிகள்: பா.விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், ரோகேஷ்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,
VFX: ஆர் ஹரிஹர சுதன்,
தயாரிப்பு நிர்வாகி: பி.பாண்டியன், ஜி சம்பத்,
நடனம்: ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர்,
சண்டைக்காட்சிகள்: ராஜசேகர்-அன்பறிவ்,
ஆடை வடிவமைப்பாளர்: சாய்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்