Damakka.in

Website for Tamil Cinema

புரஜெக்ட் சி – சேப்டர் 2

திரைப்படங்களில் ப்ரிக்வல், சீக்வல் என்று சில வகைகள் உண்டு. அதாவது முதல் பாகம், இரண்டாம் பாகம் என கூறலாம். புரஜெக்ட் சி சேப்டர் 2 பொறுத்த வரை ஃஸோபோமோர் (sophomore) என்ற பாணியில் எடுக்கப்பட்டிருக் கிறது. அதாவது இது முதல் பாகம், மூன்றாம் பாகம் இரண்டுக்கும் இடைப்பட்ட நடுப்பாகம் கதையாக உருவாகியிருக்கிறது. மூன்று பாக படத்தில் இது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல்பாகம், மூன்றாம்பாகம் இதற்கு பிறகுதான் உருவாக வுள்ளது.

புரஜெக்ட் சி சேப்டர் 2 கதைப்பற்றி பார்ப்போம்.

பி எஸ் சி கெமிஸ்ட்ரி படித்த பட்டதாரி இளைஞன் ஸ்ரீ தண்ணீர் கேன் வாட்டர் கம்பெனியில் வேலை செய்கிறார். திடீரென்று சூப்பர் வைஸர் ஸ்ரீயை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறார். அடுத்து பணக்கார வீட்டில் பக்கவாதம் பாதித்து படுக்கையில் கிடக்கும் முதியவரை கவனித்துக்கொள் ளும் வேலைக்கு செல்கிறார் ஸ்ரீ . அந்த முதியவர் ஒரு விஞ்ஞானி. அவர் அதிசய மருந்து கண்டுபிடித் திருக்கிறார். 60 வயதுள்ளவர் அந்த மருந்தை சாப்பிட்டால் அவர் 40 வயதுள்ளவரின் சக்தியை பெற முடியும். ஆனால் அதில் பக்க விளைவு அதிகம் இருப்பதால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த விஷயம் ஸ்ரீக்கு தெரிய வருகிறது. அதிசய மருந்தை திருடி விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீயிடம் உள்ள பணத்தை அடைய வீட்டு வேலைக்கார பெண் வில்லி யாக மாறி ஸ்ரீயை வெளுக்கிறார். அதேசமயம் டாக்டராக நடிக்கும் உதவி சைன்ட்டிஸ்ட் அதிசய மருந்தின் ஃபார்முளாவை கைப்பற்ற எண்ணுகிறார். இவரும் வீட்டு வேலைக்காரியுடன் கூட்டு சேர்ந்து ஸ்ரீயை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். அடுத்து நடந்தது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

மலையால பட இயக்குனர் வினோ இப்படத்தை மாறுபட்ட பாணியில் தமிழில் இயக்கியிருக்கிறார். ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தை தயாரித்திருக்கிறார் ஸ்ரீ. தண்ணீர் கேன் பேக்டரியில் வேலை செய்யும் ஸ்ரீ மீது அங்குள்ள பெண் ஆசைப்பட அதை பார்த்து பொறாமை அடையும் சூப்பர் வைஸர் ஸ்ரீயை வேலையி லிருந்து துரத்திபிறகு கதை அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.

பக்கவாதம் பாதித்த பெரியவரை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு சேரும் ஸ்ரீ அங்குள்ள வேலைக்காரி வசுதாவுக்கு நூல்விட்டு அவரை வளைத்து போடுவது கிக்.

கட்டுமஸ்த்தான வேலைக்காரியாக வரும் வசுதா செமகட்டை என்று இளசுகளை முணுமுணுக்க வைக்கிறார். திடீரென்று வில்லி யாக மாறி ஸ்ரீயை கட்டி வைத்து சுத்தியால் தாக்கி பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடத்தை சொல்லும்படி சித்ரவதை செய்யும் போது வசுதாவின் அழகு ஆபத்தானது என அச்சப்பட வைக் கிறார்.

வழக்கமாக காமெடி செய்து கலகலக்க வைக்கும் சாம்ஸ் இதில் நெகடிவ் ரோலுக்கு மாறியிருக் கிறார். என்னதானன்  அவர் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும் பயம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது.

தாத்தா ராம்ஜி படம் முழுவதும் படுக்கையிலேயே இருக்கிறார். படுத்தபடி முறைத்தும் உதட்டை பிதுக்கியும் நடித்து ஸ்கோர் செய்கிறார்.

நடுப்பாகத்தை முதலில் இயக்கியி ருக்கும் வினோ அடுத்து முதல் பாகம் இயக்குவரா? மூன்றாம் பாகம் இயக்குவாரா என்பது தெரியவில்லை எப்படி இயக்கி னாலும் ஒரே அறைக்குள் மீண்டும் இயக்கினால் எடுபடுமா என்பது சந்தேகமே.

சிபு சுகுமாரன் இசை
சதீஷ் ஆனந்த் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு ஏற்ப ஒலித்திருக் கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *