Damakka.in

Website for Tamil Cinema

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை திறந்து வைத்தனர்

 

சென்னை தி.நகரில் உள்ள முக்தா சில்க்ஸின் 27வது ஸ்டோரை தமிழ் சினிமாவின் மிக அழகான மற்றும் சென்ஷேனலான நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் முக்தா ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளரான சஷி வங்கபள்ளி கலந்து கொண்டார்.

கிட்டத்தட்ட 15,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பட்டுப் புடவைகளும் அந்த சூழலும் ஒரு தெய்வீகத் தன்மையை கொண்டுள்ளதாக நடிகை பிரியங்கா மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் இருவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பார்வையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் செட்டிநாட்டின் ஸ்பரிசத்துடன் கூடிய அந்த சூழலின் அழகியல் உணர்வைக் கண்டு பரவசமடைந்தனர்.

நடிகை பிரியங்கா மோகன் தனது ஒளிரும் புன்னகை, வசீகரிக்கும் தோரணைகள் மற்றும் அங்கிருந்த வித்தியாசமான பட்டுப் புடவைகளை முயற்சித்து இந்த நிகழ்வை மேலும் அழகுபடுத்தினார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “ஒரு பெண் ஆடைகளின் மூலம் தனக்கு பாசிட்டிவ்வான உணர்வை பெற விரும்பினால் அதற்கு முக்தா சில்க்ஸ் ஷோரூம் சிறந்த தேர்வாக இருக்கும்” என்றார். மேலும், “இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றும் கூறினார்.

நகைச்சுவை நடிகர் புகழ் தனது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை பரப்பியதோடு , பத்திரிகையாளர்களுடனும் உரையாடினார். புகழ் பேசியதாவது, “முதன்முறையாக நான் பட்டுப் புடவைகளுக்கான வழிபாட்டுத் தலத்தை நேரில் கண்டு அனுபவிக்கிறேன். நான் ஒரு கோயிலுக்குள் வந்து ஷாப்பிங் செய்வது போன்ற உணர்வை பெறுகிறேன்” என்றார். மேலும், “இந்த பிரமாண்டமான அறிமுகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அனைத்து முக்தா சில்க் புடவை பிராண்டும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *