வெங்கட்பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘NC 22’.
நாக சைதன்யா இருக்கும்படியான தீவிரமான ப்ரீ லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றதுடன் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
நாக சைதன்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக ப்ரீ லுக்குடன், படத்தின் டைட்டிலை முதல் பார்வையுடன் தற்போது வெளியிட்டுள்ளனர். வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் ‘கஸ்டடி’ என படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான மற்றும் தீவிரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா சிவா என்ற கதாபாத்திரத்தில் தீமைக்கு எதிரானவராக நிற்கிறார். மேலும் தான் உறுதியாக நம்பும் ஒரு விஷயத்திற்காகவும் எதிர்த்து சண்டையிடுபவராகவும் இருக்கிறார்.
வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு ‘A Venkat Prabhu Hunt’ என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
‘நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்’ என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்த பைலிங்குவல் திரைப்படம் அதிக அளவிலான தயாரிப்பு மதிப்பீடுகளைக் கொண்டது. மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்