Damakka.in

Website for Tamil Cinema

ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பதுதிரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு…

“வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது சென்னையைத் தளமாகக் கொண்ட ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும், இது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராகவும் உள்ளது. இது திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம் மற்றும் திரைப்பட உரிமை விற்பனை போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற பிராந்திய மொழிகளிலும் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐசரி கே, கணேஷ் தமிழ் நகைச்சுவை நடிகர் மறைந்த ஐசரி வேலனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களிடமிருந்து ஐபிஓ மூலம் ரூ.34 கோடி நிதி திரட்டுகிறது, இது திரைப்பட தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் SME தளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கின் விலை ரூ. 99/- பங்குகளின் வெளியீட்டு அளவு. ரூ 34,08,000
IPO மார்ச் 10, 2023 அன்று தொடங்கி மார்ச் 14, 2023 அன்று நிறைவடைகிறது.
உள்ளடக்கக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில்லறை முதலீட்டாளர்கள், சில்லறை அல்லாத முதலீட்டாளர்கள் போன்ற பல்வேறு வகை முதலீட்டாளர்களுக்கு IPO வழங்கப்படுகிறது, இது எங்கள் வலைத்தளமான –www.velsfilminternational.com யில் மக்கள் பார்வைக்கு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் முன்னணி மேலாளர் (Lead Manager) M/s கம்பட்டா செக்யூரிட்டீஸ் லிமிடெட், மும்பை.

IPO தொடர்பான பிற தகவல்களுக்கு, எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும், எங்களின் துணை நிறுவனமான Vels Studios and Entertainment Private Limited பெங்களூருவில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி வருகிறது.

இதில் திரைப்பட ஸ்டுடியோ, கேளிக்கை பூங்கா, செயற்கை நீரூற்று பூங்கா, சாகச விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதன் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இது 2023 ஆம் ஆண்டின் மத்தியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *