சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி / சார் திரைப்படம் ஒரு இளம் ஆசிரியரின் கதையை பற்றி சொன்னது. அவர் கிராமத்து பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு சென்று கல்வி முறைக்கு ஒரு புதிய மாற்றத்தை கொடுக்கிறார். அவர் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் சாதிய முறைக்கு எதிராக அவர்களை போராட செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கல்வி மூலமாக சமத்துவத்தை கொண்டாடவும் கற்றுக் கொடுக்கிறார். பல கடுமையான தடைகளை கடந்து வெற்றி பெறுகிறார்.
அவருடைய மன உறுதிக்கும் மாணவர்களுடைய தீர்மானத்திற்கும் நன்றிகள். இதேபோன்ற குணாதிசயங்களைக் கொண்ட, தன்னுடைய சேவைகளுக்காக ஜனாதிபதி விருது வென்ற அரசு பள்ளி ஆசிரியர் கே.ரங்கையா அவர்களை வாத்தி படக்குழுவினர் சமீபத்தில் கௌரவப்படுத்தியுள்ளனர்.
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி, ஆசிரியர் கே.ரங்கையாவை சந்தித்து இந்த படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் உரையாடினார். தன்னுடைய முயற்சிகளுக்காக இளம் வயதிலேயே ஜனாதிபதி விருது பெற்ற ஆசிரியராக இருப்பதுடன் தன்னுடைய சாவர்கேட் கிராமத்தில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்ததில் ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கிறார் கே.ரங்கையா.
இவர் பணியில் சேர்ந்த சமயத்தில் அந்த கிராமத்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் இருந்தவர் மாறியபோது, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள முடிவு செய்ததுடன் அந்தப்பகுதியில் உள்ள தொடர் பிரச்சினைகளுக்கு எதிராக பிரச்சாரங்களையும் நடத்தினார்.
இந்த படத்தை பார்த்த பிறகு தன்னையே இந்த படத்தில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது, தான் என்ன சாதித்து இருக்கிறேனோ, அதற்காக 13 வருடங்களாக மிகப்பெரிய போராட்டங்களை தான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தி கூறினார்.
இப்படி ஒரு அற்புதமான படத்தை உருவாக்கியதற்காக இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு அவர் நன்றி கூறியதுடன், வாத்தி / சார் படத்தில் உள்ள பல காட்சிகள் அவருடைய சுயசரிதை போன்றே இருந்ததாகவும் கூறினார். தங்களுடைய வாழ்க்கையை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட இவர் போன்ற ஆசிரியர்களுக்கு வாத்தி படக்குழு தங்களது வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களை கடவுளைப் போன்றே கருதவும் செய்கின்றது.
“குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ” என்கிற ஸ்லோகம் இதைவிட வேறெதற்கும் கச்சிதமாக பொருந்த முடியாது.
ஆசிரியர் கே.ரங்கையாவின் இந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகவும் ஒரு நூலகத்தை நிர்மாணிக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 3 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
பள்ளிகளில் நூலகம் அமைக்கவும் மாணவர்களின் கல்வி, சொந்த மற்றும் தொழில் முறை வெற்றிக்கு அத்தியாவசியமான புத்தகங்கள் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட இருக்கிறது.