Damakka.in

Website for Tamil Cinema

ZEE5 ஒரிஜினல், ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

 

Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ZEE5 தளத்தில் திரையிடப்படவுள்ளது.

இந்தியா, 23 ஆகஸ்ட் 2023: இந்தியாவின் மிகப்பெரிய பன்மொழி கதைசொல்லி, மற்றும் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் நேரடி-டிஜிட்டல் திரைப்படமான ‘ஹட்டி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நவாசுதீன் சித்திக் மற்றும் அனுராக் காஷ்யப் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், சவுரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த பரபரப்பான பழிவாங்கல் டிராமா திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ளார். Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பரப்பரான ரிவென்ஜ் டிராமா திரைப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் திரையிடப்படவுள்ளது.

என்சிஆர், குர்கான் மற்றும் நொய்டாவில் தற்கால பின்னணியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது இப்படம். குற்றப்பின்னணி கொண்ட திருநங்கை கும்பலில் சேர அலகாபாத்திலிருந்து டெல்லிக்கு வரும் நவாசுதீன் சித்திக், அந்த கும்பலில் சேர்ந்து, வளர்கிறான். தன் குடும்பத்தை அழித்த அனுராக் காஷ்யப்பை தேடி பழிவாங்குவதே அவன் நோக்கம். புதுமையான களத்தில் அழுத்தமான பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது இந்த ஹட்டி திரைப்படம். அக்ஷத் அஜய் ஷர்மா மற்றும் ஆதம்யா பல்லா இணைந்து எழுதியுள்ள, ‘ஹட்டி’ தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப்பின்னணியை, குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத நவாசுதீன் சித்திக்கின் திருநங்கை அவதாரத்தைத் தயாரிப்பாளர்கள் வெளிப்படுத்தியதிலிருந்தே, ரசிகர்களிடம் உற்சாகமும் எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது. இந்த அடையாளம் காண முடியாத அவதாரத்தில் நவாசுதீனைப் பார்த்த ரசிகர்கள் அவர்தானா என நம்ப முடியாத நிலையில் ஆச்சரியத்தில் உள்ளனர். ரசிகர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் வகையில், ZEE5 ஹட்டி செப்டம்பர் 7ஆம் தேதி பிரீமியர் ஆகுமென அறிவித்துள்ளது.

அனுராக் காஷ்யப் கூறுகையில், “ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக AD (உதவி இயக்குநராக) உதவியிருக்கிறார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். மேலும் நீங்கள் இதுவரை பார்த்திராத உலகைக் காட்டும். இந்த புதிய உலகத்தில் நவாஸை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ZEE5 இல் ஹட்டி படத்தின் வெளியீட்டிற்காக நான் உற்சாகமாகக் காத்திருக்கிறேன், பார்வையாளர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்”.

ஜீஷன் அயூப் கூறுகையில், “ZEE5 இல் வெளியாகவுள்ள ஹட்டி படத்தின் பிரீமியர் காட்சிக்காக நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இந்தப் படம் உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டும், ஒரு வித்தியாசமான படைப்பு. அதே நேரத்தில் கவனத்திற்கும் உரியது. எங்கள் அறிமுக இயக்குநர் அக்ஷத், இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் அளவிற்கு டிரெய்லர் அமைந்துள்ளது. ஹட்டி உண்மையில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடனான அற்புத பயணமாக இருக்கும். நவாஸ், அனுராக் சார், இலா மற்றும் நான் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் எங்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் முழுமையாகத் தந்துள்ளோம்.

இலா அருண் கூறுகையில்.., “சுவாரஸ்யமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களம் கொண்ட ஹட்டி, திருநங்கைகளின் சமூகத்தைச் சித்தரிக்கும் ஒரு வித்தியாசமான பழிவாங்கும் படமாகும். இப்படத்தில் ரேவதி மா ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தற்செயலாக, படத்தில் நான் மட்டுமே பெண் கலைஞர். நீங்கள் ஹட்டியை பார்க்கும்போது திருநங்கை கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையேயான சண்டை, அவர்களின் உணர்வுகள், வாழ்க்கை மற்றும் யதார்த்தம், மட்டுமல்லாமல் அதிகார அமைப்பு மற்றும் ஊழல் நிறைந்த சமூகம் திருநங்கைகளின் பலவீனங்களையும் அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் பார்ப்பீர்கள். ஹட்டி உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களத்தில் நடப்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”.

செப்டம்பர் 7, 2023 அன்று ZEE5 இல் “ஹட்டி” திரையிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *