Damakka.in

Website for Tamil Cinema

மைக்கேல் ; விமர்சனம்

தனது தாயை ஏமாற்றி அவரது சாவுக்கு காரணமாக இருந்தவரை பழிவாங்க சிறுவன் மைக்கேல் நகரத்திற்கு வருகிறான். அந்த சமயத்தில் அவருக்கு நகரத்தின் மிகப்பெரிய தாதா கௌதம் மேனனை காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு பிரதி பலனாக அவரது வலது கையான அடியாள் மூலமாக பாதுகாத்து வளர்க்கப்படுகிறான் மைக்கேல்.
ஒரு கட்டத்தில் மீண்டும் கௌதம் மேனன் உயிரை எதிரிகளிடமிருந்து தனி ஆளாக போராடி காப்பாற்றி அவரது நன்மதிப்பையும் பெறுகிறான் மைக்கேல். அதை தொடர்ந்து மைக்கேலுக்கு கௌதம் மேனன் கொடுக்கும் முக்கியத்துவம் அவரது மகனுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. தனக்கு எதிரான சதி செய்த நபர் ஒருவரையும் அவரது மகளையும் கொன்று விட்டு வரும் வேலையை மைக்கேலிடம் கொடுக்கிறார் கௌதம் மேனன்.
அப்படி சென்ற இடத்தில் அந்த பெண்ணிடம் காதலில் விழும் மைக்கேல் கொடுத்த வேலையை முடிக்க தடுமாறுகிறான். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கௌதம் மேனனின் மகன் அவருக்கு எதிராக காய்களை நகர்த்தி, கௌதம் மேனனிடம் கெட்ட பெயர் கிடைக்க வழி செய்கிறார்.
இதை தொடர்ந்து தன்னை காப்பாற்றியவன் என்றும் கூட பாராமல் தனது மகனை காப்பாற்றுவதற்காக மைக்கேலை கொன்று விடச் சொல்லி உத்தரவிடுகிறார் கௌதம் மேனன். அவரது உத்தரவை நிறைவேற்றி மைக்கேலை கொன்றார்களா ? அதிலிருந்து அவர் தப்பித்தாரா என்பதுடன் மைக்கேல் எதற்காக கௌதம் மேனனுடன் இணைந்தார் என்பதற்கான ஒரு திருப்பத்துடன் அதற்கான தீர்வுடன் படத்தை முடிக்கிறார்கள்.
மீண்டும் ஒரு அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோ பில்டப், அதேபோன்ற ஒரு வில்லன், அதே அம்மா சென்டிமென்ட் என படம் முழுவதும் கேஜிஎப் படத்தின் இன்னொரு வெர்சனை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
கௌதம் மேனனின் டீசன்ட்டான கெத்தான வில்லத்தனம், திருப்தியான நடிப்பு நிறைவு தருகிறது. கதாநாயகி திவ்யான்ஷாவுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்தாலும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக என்ட்ரி கொடுத்து தனது வித்தியாசமான நடிப்பால் வழக்கம் போல மிரட்டி விடுகிறார். அவரது மனைவியாக வரலட்சுமியும் தன் பங்கிற்கு நிறைவாக செய்துள்ளார்.
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்து செல்லும் தீப்சிகாவின் நடிப்பு அவருக்கு இன்னும் பல வாய்ப்புகளை தேடித்தரும் என்கிற நம்பிக்கையை தருகிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இன்னும் விக்ரம் வேதா பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை என்பதை படத்தின் பின்னணி இசை உணர வைக்கிறது. அதே சமயம் படத்திற்கு விறுவிறுப்பாகவும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
மீண்டும் ஒரு கேங்ஸ்டர் பாணியிலான படம் என்றாலும் அதை ஓரளவுக்கு நேர்த்தியாக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கொடுத்திருந்தாலும் இதை ஏன் கேஜிஎப் போலவே எடுத்தார்கள் என்கிற கேள்வி தான் படம் விட்டு வெளியே வரும்போது நம் மனதில் தோன்றுகிறது. மற்றபடி ரசிகர்கள் தாராளமாக இந்த படத்திற்கு டிக்கெட் போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *