Damakka.in

Website for Tamil Cinema

கருமேகங்கள் கலைகின்றன டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

 

 

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வுபூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கியுள்ளார். வாவ் மீடியா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக அதிதி பாலன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்தப்படத்தின் டிரைலர் இன்று (ஆக-13) வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

 

ஜெய்பீம் படத்தில் நடித்தான் மூலம் நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டுதான் ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அந்தப்படம் நீதியரசர் சந்துருவின் புகழை தமிழக மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டியது.

 

ஒய்வு பெற்ற பின்னும் கூடதமிழக அரசு அமைக்கும் ஆணையங்களில் ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000க்கும் மேற்பட்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த புத்தகங்களையும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

 

கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப்போன்ற ஒரு நேர்மையான பாத்திரம் தான். அதனால் இந்தப்படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரும்பினர். அதனை ஏற்றுக்கொண்டு இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் நீதியரசர் சந்துரு.

 

படம் வெளியீட்டு தேதி குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *