Damakka.in

Website for Tamil Cinema

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023 சென்னையில் துவங்கியது.

 

நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும் “வானம் கலைத்திருவிழா” பெரும் மக்களின் வரவேற்புடன் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தலித் வரலாற்று கண்காட்சியுடன் துவங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 07.04.2023 இன்று பி கே ரோசி திரைப்பட திருவிழா துவங்கியது. சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் பறையிசை முழக்கத்துடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் துவக்கிவைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக தீபா தன்ராஜ், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ஷான், தியாகராஜன் குமாரராஜா,துருஷாந் இங்லே ஆகிய இயக்குனர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் நிகழ்வை தொடங்கி வைத்த இயக்குனர் பா.ரஞ்சித்
“புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித் வரலாற்று மாதமாக வானம் கலைத் திருவிழாவை முன்னெடுத்து செல்கிறோம்.
கறுப்பின மக்களின் பண்பாட்டு எழுச்சியில் உருவான புரட்சியை மையமாக வைத்து பண்பாட்டு தளத்தில் பல செயல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்” என்று சிறப்புரையாற்றினார்.
மேலும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைத்து விருந்தினர்களும் நிகழ்வை சிறப்பித்து கொடுத்தனர்.

திரைப்பட திருவிழாவின் முதல் நாளான இன்றை தொடர்ந்து 8.04.2023 நாளை மற்றும் 9.04.2023 நாளை மறுநாளும் பல திரைப்படங்களின் திரையிடல்களும் நடைபெறவிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் வானம் கலைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக
இசை நிகழ்ச்சி கோயம்பத்தூரிலும், புகைப்பட கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, இலக்கிய கூடுகை, அரசியல் கூடுகை சென்னையில் வெவ்வேறு இடங்களில் இம்மாதம் முழுக்க நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *